விஜய்தேவர கொண்டா- ஷாலினி பாண்டே காம்பினேஷனில் தெலுங்கில் செம ஹிட் அடித்த படம் "அர்ஜுன் ரெட்டி.' இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்சை வாங்கி யது E-4 என்டர்டெயின் மென்ட் நிறுவனம்.

Advertisment

மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களைத் தயாரித் துள்ளது இந்த நிறுவனம்.

bala

தனது மகன் துருவ், பாலா டைரக்ஷனில் தான் ஹீரோவாக அறிமுகம் ஆகவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் சீயான் விக்ரம். இந்த நிலையில்தான் "அர்ஜுன்ரெட்டி'-யை தமிழில் எடுத்துத் தருமாறு, டைரக்டர் பாலாவை அணுகியது E-4 நிறுவனம்.

Advertisment

bala

ரீமேக் படங்களை பண்ணுவ தில்லை என பாலா மறுத்தபோது, விக்ரம்தான் அவரை காம்ப்ரமைஸ் பண்ணி சம்மதிக்க வைத்திருக்கிறார். அதன்பின்தான் துருவ், மேகா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடிப்பில் ‘"வர்மா'’ படம் ஆரம்பமானது.

ஷூட்டிங்கும் ஸ்பீடாக நடந்து, ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது 2018 செப். 24 அன்று துருவ் பிறந்தநாளன்று, சென்னையில் இருக்கும் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில், ‘"வர்மா'-வின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் ஃபங்ஷன் அமர்க்களமாக நடந்தது.

Advertisment

காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ‘"வர்மா' ரிலீசாகலாம் என கோடம்பாக்கத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருந்தபோதுதான், “"எந்தவகையில் பார்த்தாலும் "வர்மா'-வை பார்க்கச் சகிக்கவில்லை. எனவே அந்தப் படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, புது டைரக்டர் ஒருவர் மீண்டும் "வர்மா'-வை எடுப்பார், துருவ்தான் ஹீரோ. இந்தப் படத்தை வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் செய்வோம்' என கடந்த 7-ஆம் தேதி மாலை தடாலடியாக அறிவித்துவிட்டது E-4. கோளாறு பாலாமீதா? E-4 தயாரிப்பு நிறுவனம்மீதான்னு இனிமேதான் தெரியும். E-4 தயாரிப்பு நிறுவனம் மீதான்னு இனிமேதான் தெரியும்.